Thursday, August 26, 2010

கேது பற்றி பார்ப்போம்


கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் கேது பற்றி பார்ப்போம்.

rahuketu_thumb4

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

கேது

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

செம்பாம்பு, சாயாகிரகம்

02

எண் கணிதம்

7

03

உபகிரகங்கள்

தூமகேது

04

நட்சத்திரங்கள்

மகம், மூலம், அசுவினி

05

குணங்கள்

பூர்வ பஷம் – பாபி

அமர பஷம் – சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

விநாயகர், இந்திரன், சித்ரகுப்தன்

07

ஷேத்திரம்

காளாஸ்திரி

08

பூஜித்தல்

செந்தூரம், செம்மசம்

09

கிரக ப்ரீதி

கணபதி தோத்ரம், துர்க்கா தோத்ரம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1½ ஆண்டுகள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

எதிர்

12

கிரக திசையின் கால அளவு

7 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

பிற்பகுதி

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

3 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

3,7,11

10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சனி, சுக்ரன்

17

சம கிரகங்கள்

புதன், குரு

18

பகை கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

விருச்சிகம்

20

அதி உச்ச பாகங்கள்

---

21

மூலத்திரிகோண வீடு, பாகை

விருச்சிகம்

22

நட்பு வீடுகள்

மிதுனம், மீனம், கும்பம் தனுசு,மகரம்,கன்னி,துலாம்

23

ஆட்சி வீடு

மீனம், விருச்சிகம்

24

பகை வீடுகள்

மேஷம், கும்பம், .கடகம், சிம்மம்

25

நீச வீடு

ரிஷபம்

26

அதி நீச பாகங்கள்

---

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

7

29

அஸ்தங்கம்

---

30

கிரகணங்கள்

---

31

கண்ட வலிமை

பாட்டில்

தன்மைகள் - 7

32

பறவை

இராஜாளி

33

விலங்கு

ஆண் குதிரை

34

நாற்கால் பிராணி

---

35

வாகனம்

சிங்கம்

36

தானியங்கள்

மொச்சை, கொள்ளு

37

தாவரம்

---

38

மர வகை

புதர்

39

சமித்துகள் (மரம், செடி)

தர்பை புல், தர்பை

40

மலர்கள்

செவ்வல்லி,வெண்தாமரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

துருக்கல்(உலோகமில்லை)

42

இரத்தினங்கள்

வைடூரியம்

43

பொருள்கள்

---

44

நிறங்கள்

புகைசாம்பல், சிவப்பு, பலகலர்

45

வஸ்திரம்

பலவித புள்ளி, விசித்திர முள்ள துணி

46

சுவைகள்

உறைப்பு, புளிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

மலைபிரதேசம்

48

பாஷைகள்

மேலை நாட்டு பாஷைகள்

49

ருது

---

50

அயனாதி காலங்கள்

---

51

திக்குகளில்

வடமேற்கு

52

அதிபதி திசைகள்

வடமேற்கு

53

நன்மை செய்யும் திசை

---

54

பஞ்சபூதத்தில்

ஆகாயம், நெருப்பு

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

முச்சில்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

கை, தோள்

58

நாடி

பித்தம்

59

பிணி

நகச்சுற்று,பித்தம்,உஷ்ணம்

60

உறவு முறை (நாடி முறை)

தாய்வழி பாட்டன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

ஏவலாள்

62

கிரக வயது

---

63

தத்துவம் (கிரக லிங்கம்)

அலி (ஆண்)

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

உயரம்

66

குணம்

தமோ (குரூரம்)

67

பிரிவு

கிருஸ்தவர், தொழிலாளர், மேலை நாட்டவர்

சோதிடம் ஒரு வானவியல் பிரிவில் ஒன்றா ?


வானவியல் என்பது வானில் பல்வேறு பொருள்கள் இருக்கும் பௌதீகமான தன்மைகளை கண்டறிய்வும், குறிப்பிடவும் பயன்படுகிறது. சோதிடம் என்பது வானவியல் மாற்றங்கள் எவ்வாறு ஜீவராசிகளை அல்லது கிரகங்களை பாதிக்கின்றன என்பது பற்றியது. சோதிடம் கணக்கில் எடுத்து கொள்வது கிரக நிலைகளால் ஏற்படும் பலன்கள் மட்டும் தான். இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றன.

Astronomy deals with the study of the location, motion, and nature of objects in space. Astrology is the interpretation of the influence of the heavenly bodies on human affairs.

சோதிடம் என்பதும் வானியல் என்பதும் வேறு வேறு. சோதிடம் என்பது வானியலின் மாற்று அல்ல. உண்மையில் சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது. வானவியல் இல்லாமல் சோதிடம் இல்லை.

வானவியலில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. சோதிட விதிகளை ஏற்படுத்திய முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் அறிந்தவற்றில் உள்ள சரியானவற்றை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும். இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறப்படுகின்றன.

சோதிடத்தின் அறிவியல் பூர்வமான விளக்கம் என்ன ?

சோதிடத்தின் செயல்பாட்டை கிளஸ்டர் அனலைசிஸ் (Cluster analysis) முறைமை மூலம் விளக்கலாம். அதாவது மனிதர்கள் பிறந்த காலகட்டத்தில் இருந்த கிரக நிலைகளை கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பலன்களை பதிவு செய்வது(observation). பிறகு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புள்ளி விவர அடிப்படையில் மனிதர்களின் கிரக நிலைகள் மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்களை ஒப்பீடு செய்து (analysis) கிரகங்களின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. இப்பலன்கள் மற்றவர்களுக்கு நிகழ கூடிய வாய்ப்பு சதவிகிதம் (output) தரப்படுகிறது.

சிலர் சோதிடம் முடிவான முடிவுகளை தருவதில்லை என குறைபடுகின்றனர். சிலர் சோதிடர் சொல்வதையே முடிவு எனவும் கருதுகின்றனர். நன்றாக கற்றறிந்த சோதிடர் எதையும் முடிவாக சொல்ல கூடாது என்பது தான் சோதிடத்தின் அடிப்படையே. நிகழ்தகவு காசை சுண்டிவிட்டால் நிகழ கூடிய வாப்பு சதவிகிதம் என்பதை சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ விழுவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறதே என்பது போன்றது. சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது.

இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.
இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோய் வருவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது.

சோதிடம் புவியை மையமாக கொண்டு கிரகங்களின் பாகைகளை கணக்கிடுவது ஏன் ?


சோதிடம் உயிரினங்கள் குறித்து சொல்ல படுவது. மனிதர்கள் இருப்பது பூமியில். எனவே தான் பூமியை சுற்றி பிற கிரகங்கள் உள்ள பாகையை வைத்து சோதிடம் சொல்கிறார்கள். சோதிடம் கணக்கிடப்படும் உயிரினம் எந்த கிரகத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தை மையமாக கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். உதாரணமாக செவ்வாயில் இருக்கும் மனிதனுக்கு செவ்வாயை வைத்து சோதிடம் சொல்ல வேண்டும்.

ஏன் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கே வரவில்லை ?

சூரிய மையக் கொள்கைக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தப் படுத்தி குழப்பி கொள்ள தேவையில்லை. புவிக்கு ஏற்படும் மாற்றங்களை காண புவியை பொருத்து மற்ற கிரகங்களின் நிலையை காண வேண்டும் என்பது எளிதில் புரிந்து கொள்ள கூடியதே. சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது & ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது.

27 நட்சத்திரம் என்பது பொய் தானே ?

வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவது என்பது முட்டாள் தனமானது என்பதும் பெரியோர் வாக்கு தானே ? பிறகு எப்படி 27 நட்சத்திரங்கள் என்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ?

அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லே புவியின் வெவ்வேறு பாகைகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளை தான் குறிக்கிறது. தனித்த நட்சத்திரங்களை அல்ல.

zodiac-sky-200X200zodiac-signs-1

சோதிடத்தில் நட்சத்திரம் என்பது 360டிகிரியை 27ஆக பிரித்து அவற்றை சுட்டும் இடங்களுக்கான பெயர்கள் அவ்வளவுதான்.
டிகிரி என்னும் முறை கண்டு பிடிக்க படாத அக்காலத்தில் வெவ்வேரு இடங்களில் இருந்த நட்சத்திர தொகுதிகளை வைத்து 360 டிகிரியை வகைப்படுத்தினர் அவ்வளவு தான். அவை நாம் வானத்தில் காணும் நட்சத்திரங்களில் 27 மட்டுமே அல்ல. நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து மற்ற கிரகங்கள் வானில் இருக்கும் பாகையை அடையாளம் கண்டு கொண்டனர்.

logo1

நட்சத்திர பாதம் எனும் விளக்கத்தை அறிந்தால் ”சோதிட நட்சத்திரம்” தற்போது நடைமுறையிலான “நட்சத்திரம்” அல்ல டிகிரியை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர பகுதிக்கு பாதங்கள் என்று பெயர்.

360 டிகிரி = 27 நட்சத்திரங்கள் = 108 பாதங்கள் (27 *4)

சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது. இச்சிறுபகுதி கலை எனப்படும்.

1 பாகை = 60 கலை

இதன் மூலம்
1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள என அறியலாம்.

CircularAstrologicalPosters-2

சந்திரன், ராகு( Rahu), கேது (Kethu) என்பவற்றின் அறிவியல் ஆதாரம் என்ன ?

ராகு, கேது பார்ப்பதற்கு முன் சென்ற பகுதியின் தொடர்ச்சியாக அமாவாசை, பௌர்ணமி பற்றிய மேலும் சில அறிவியல் தன்மைகளை பார்த்து விடுவோம்.

அறிவியல் உண்மைகள்

  • புவி, நிலவு ஆகியவை தன்னுடைய பாகங்களின் தோராயமாக 50% பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளியை பெறுகின்றன.
  • ஒவ்வொரு அமாவசையிலும் சூரியனும், மதியும் புவிக்கு ஒரே பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு மறுமுனையில் அமைந்த சூரியனின் வெளிச்சம் படாத பகுதி எனவே நிலவு தெரிவதில்லை
  • அமாவசையில் சூரிய உதயமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்
  • ஒவ்வொரு பௌர்ணமியிலும் சூரியனும், மதியும் புவிக்கு எதிரெதிர் பாகையில் உள்ளன. புவியில் தெரியக்கூடிய நிலவுடைய பகுதி நிலவின் சூரியனுக்கு எதிராக அமைந்த, சூரியனின் வெளிச்சம் படும் பகுதி எனவே நிலவு முழுவதும் தெரிகிறது.
  • பௌர்ணமியில் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

moon_phases_diagram

ராகு, கேது

ராகு கேது என்பவை கிரகங்கள் என்பதன் மூலம் சோதிடம் பொய் எனபதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

சாயா என்பதன் பொருள் என்ன ?

நன்றாக கவனித்தால் சோதிடத்தில் ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது விளங்கும். சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை - மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள்.

ராகு, கேது இல்லாத சோதிடம் உண்டா ?

இந்திய விஞ்ஞானியான ஆர்யபட்டர் தன்னுடைய சூரிய சித்தாந்தத்தில் ராகு, கேது என்பவை சாதாரண கிரகங்கள் அல்ல என்பதை மறுத்துள்ளார். சூரிய சித்தாந்தத்தை கொண்டு சோதிட விளக்கங்கள் வடிவமைத்த வராக மிகிரர் தன்னுடைய நூலான பிருஹத் ஜாதகம் எனும் நூலில் ஆயிரக்கணக்கான சூத்திரங்களில் ராகு, கேது என்பதை குறிப்பிடாமலேயே சாதகம் பார்க்கும் படி வடிவைத்துள்ளார்!

Varahmihir, the father of astrology in his famous book Brihat Jataka did not recognise Rahu and Ketu but in his another book Brihat Samhita he devoted one chapter to Rahu and Ketu and considered them not any celestial physical body like other planets but as the nodes of the Moon, ie, points of intersection of orbits of the Moon and the Earth. The north point of this intersection is called Rahu (north node) while the south point of that is called Ketu (south node). In Surya Siddhanta (an antique book on Astronomy) they are also considered as nodal points which are now known as shadowy planets. Our learned astrologers found their significant role in judging horoscope for ups and down in one’s life, these nodes have been referred to the class of planets.

--http://www.futurepointindia.com/articles/research-articles/rahu-ketu.aspx

ராகு, கேது பிற்காலத்தில் ஏன் உருவாக்கபட்டது ?

  • பூமியின் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகள் நிகழ்வதை கண்டறிந்தனர்.
  • இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
  • இந்த புள்ளிகளும் 18.6 வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திர மண்டலங்களை சுற்றி வந்து புவி சுற்றை நிறைவடைவதை கண்டறிந்தனர்.
  • இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் உள்ளதை கண்டறிந்தனர்.
  • இந்த கற்பனை புள்ளிகள் கொண்டு கிரகணங்கள் நிகழ்வதை தோராயமாக கணித்தனர்.

எனவே இவற்றிற்கு பெயர் கொடுக்க முனைந்த அறிஞர்கள் கற்பனையான் மெய்நிகர் புள்ளிகள் எனும் பொருள் வாய்ந்த சாயா கிரகம் என்று கூறினர்.

rahuketu_thumb[1]

அறிவியல் ரீதியான விளக்கம் என்ன ?

lunar_perturbation

நன்றி..... அறிவியல் & தமிழ்


உங்களுக்கு ஜாதக ரீதியில் ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக விளக்கப் படும்...

நவக்கிரஹ ஸ்தோத்திரம்


ஸூர்ய நமஸ்காரம் சூரிய வணக்கம்

ஜபா குஸூம ஸங்காசம் சீலமாய் வாழச் சீரருள் புரியும்
காச்யபேயம் மஹாத்யுதிம்! ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம் சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !! வீரியா போற்றி, வினைகள் களைவாய்

சந்த்ர நமஸ்காரம் சந்திரன் வணக்கம்

ததி சங்க துஷாராபம் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
ஷீரோதார்ணவஸம்பவம்! திங்களே போற்றி, திருவருள் தருவாய்
நமாமி சசினம் ஸோமம் சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சம்போர் மகுடபூஷணம்!! சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி

அங்காரக நமஸ்காரம் செவ்வாய் வணக்கம்

தரணீ கர்ப்ப ஸம்பூதம் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
வித்யுத்காந்தி ஸப்ரபம் ! குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்கள் செவ்வாய் மலரடி போற்றி
மங்களம் ப்ரணமாம் யஹம்!! அங்காரகனே அவதிகள் நீக்கு

புத நமஸ்காரம் புதன் வணக்கம்

ப்ரிங்கு கலிகா ச்யாம் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
ருபேணா ப்ரதிமம் புதம்! புத பகவானே பொன்னடி போற்றி
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
தம் புதம் ப்ரணமாம் யஹம்!! உதவியே யருளும் உத்தமா போற்றி

குரு நமஸ்காரம் குரு வணக்கம்

தேவானாம் ச ரிஷஷீணாம் ச குணமிகு வியாழக் குருபகவானே
குரும் காஞ்சன ஸந்நிபம்! மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
புத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!! க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்

சுக்ர நமஸ்காரம் சுக்கிர வணக்கம்

ஹிமகுந்த ம்ருணாளாபம் சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
தைத்யானாம் பரமம் குரும்! வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
பார்கவம் ப்ரணமாம் யஹம்!! அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி நமஸ்காரம் சனி வணக்கம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் சச்சரவின்றிச் சாகா நெறியில்
தம் நமாமி சனைச்சரம்!! இச்சகம் வாழ இன்னருள் தா தா.

ராகு நமஸ்காரம் ராகு வணக்கம்
அர்த்தகாயம் மஹாவீர்யம் அரவெனும் ராகு அய்யனே போற்றி
சந்தராதித்ய விமர்தனம்! கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!! ராகுக்கனியே ரம்மியா போற்றி

கேது நமஸ்காரம் கேது வணக்கம்

பலாச புஸ்பஸ்ஙகாசம் கேதுத் தேவே கீர்த்தித் திருவே
தாராகாக்ரஹ மஸ்தகம்! பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!! கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

இந்த வாரம் உங்களுக்கு எப்படி????



மேஷம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மேஷ ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் தொழில் ரீதியான பணவரவுகளைப் பெறலாம். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். கடன் பாக்கிகள், கட்டண பாக்கிகளை செலுத்துவீர்கள். நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். 24, 25, 26ம் தேதிகளில் மனைவி, குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள். உறவினர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம்.செவ்வாய், சனி சாதகமாக இயங்குவதால், உத்தியோகம், விவசாயப் பணிகள், வர்த்தகம், வீடு, மனை தொடர்பான விஷயங்கள், சட்டம், காவல்துறை தொடர்பான வகையில் நன்மைகள் கைகூடும். போட்டி, எதிர்ப்புகளை முறியடித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்காக சில நல்ல காரியங்களைச் செய்யலாம். கடன் பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பு உருவாகும்.புதன் சாதகமாக இருப்பதால், கல்வி முயற்சிகள், ஏஜன்சி, கமிஷன் தொழில், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. இருந்தாலும், தேக ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். கேது சாதகமான நிலையில் உள்ளதால் மாற்று மதத்தினர் உதவிகரமாக இருப்பர். இளைய உடன் பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமற்ற நிலையில் உள்ளதால் பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் செலவுகள் கூடும்.வரும் 27, 28ம் தேதிகளில் செலவு, அலைச்சல் உண்டு.

ரிஷபம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

ரிஷப ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் உடல் நலக் குறைவுகளால் அவதிப்படலாம். முக்கியமான கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் சிலரை எதிர்பாராமல் சந்திக்கலாம். விருப்பம் இல்லாமல் சில செலவுகளைச் செய்யலாம். 24, 25, 26ம் தேதிகளில் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு வேலைகள் காரணமாகவோ பரபரப்பாக செயல்படலாம். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளுக்கு வாய்ப்பு உண்டு.புத்தி ஸ்தானத்தில் செவ்வாயும், சனியும் சஞ்சரித்து வருவதால், அவ்வப்போது மன அமைதியை, நிம்மதியை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கலாம். சொத்து விவகாரங்கள், சகோதரர்கள், போலீஸ் தொடர்பான விஷயங்கள், உத்தியோக ரீதியான காரியங்கள், கட்டட பணிகள், கடன் விவகாரங்கள் போன்றவற்றில் சிரமங்கள், மன உளைச்சல்களுக்கு ஆட்படலாம். இருந்தாலும், சுக்கிரனும் அங்கிருப்பதால், சற்று ஆறுதலான அனுபவங்களையும் அவ்வப்போது எதிர்கொள்ளலாம். பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள், கேளிக்கை கொண்டாட்டங்கள், விருந்து, உபசரிப்புகள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள்.நான்காம் இடத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் சூரியன், பத்தாம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக பரபரப்பாக செயல்பட நேரிடலாம். அடுக்கடுக்காக பல வேலைகள் குவியலாம். தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான வகையில் அலைச்சல், திரிச்சல் உண்டு. குரு வக்கிர கதியில் இருப்பதால், பெரிய மனிதர்கள், நல்லவர்களின் ஆலோசனை, உதவி கிடைப்பது கடினம்.வரும் 27, 28ம் தேதிகளில் ஆதாயகரமான பணவரவுகளைப் பெறலாம். சில வேலைகள் சுலபமாக முடியும்.

மிதுனம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மிதுன ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், மந்தம், மறதி, கவனக்குறைவு போன்றவற்றால் அவதிப்படலாம். சிலரிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனஅமைதி பாதிக்கப்படலாம். முக்கிய வேலைகளில் முடக்கம் ஏற்படலாம். தண்டச் செலவு நேரும். 24, 25, 26ம் தேதிகளில் கலகலப்பான அனுபவங்களைச் சந்திக்கலாம். எதிர்பாராத பணவரவு ஒன்று வந்தாலும், அதை மற்றொரு வகையில் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்லலாம்.சூரியன் மூன்றாம் இடத்தில் சாதகமாக இருப்பதால், தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக முடியும். அரசு கான்ட்ராக்ட் எடுக்க மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் அகன்று பாசம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளை நம்பி இறங்கிய காரியங்களில் முன்னேற்றம் உண்டு. மருத்துவ சிகிச்சை பெற மேற்கொண்ட முயற்சிகளிலும் முன்னேற்றம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்கள் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். ஏஜன்சி தொழில் புரிவோர் கணிசமான வருவாய் பெறலாம். நான்காம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால், உடல் ரீதியாக சிறு, சிறு உபாதைகள் அவ்வப்போது உங்களை ஆட்கொண்டு உற்சாகத்தை குறைக்கலாம். வேலைப்பளுவும் அதிகரிக்கும். எந்த வேலையும் சுலபமாக முடியாமல் கடுமையாக இழுத்தடிக்கலாம். வரும் 27, 28ம் தேதிகளில் காரிய வெற்றி உண்டு. பணம் வரும்.

கடகம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

கடக ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். பழகிய சிலர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ பணவரவுகளைப் பெறலாம். அண்டை, அயலார் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடுமையான வேலை நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் அசராமல் செய்து முடிப்பீர்கள். 24, 25, 26ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் பொறுமை, நிதானமாக செயல்பட வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்கள், வீண் அலைச்சல்களுக்கு ஆட்படலாம். எதிர்பார்த்த பணவரவுகள் வராமல் இழுத்தடிக்கலாம். பயணங்களில் தடை ஏற்படலாம்.மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருப்பதால், எந்த பிரச்னைகளையும் சமாளிக்கும் வல்லமை அதிகரிக்கும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லை விட்டுச் செல்வர். போலீஸ், நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தது போல சாதகமாக அமையலாம். வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். தடைபட்ட கட்டட பணிகளை முடுக்கி விடும் சூழ்நிலை உருவாகும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள். சகோதரிகள் மீதான பாசம் அதிகரிக்கும். அவர்கள் கேட்டதை கொடுப்பீர்கள்.இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால், சூடான பேச்சு வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அரசியல், மருத்துவம், அரசாங்கம், அதிகாரிகள், தகப்பனார் தொடர்பான விஷயங்களில் தொல்லைகளே அன்றி, அனுகூலம் இல்லை.வரும் 27, 28ம் தேதிகளில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்கலாம். செலவு உண்டு.

சிம்மம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

சிம்ம ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம். பல மணி நேரமாகும் என, நினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். சந்தோஷம் தரும் செய்திகளைக் கேட்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் சந்தோஷமான அனுபவங்களை எதிர்கொள்ளலாம். அடுத்த சில நாட்களுக்குப் பின் நடைபெற உள்ள காரியங்களுக்காக முன்னேற்பாடு செய்வீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாயும், சனியும் சஞ்சரிப்பதால் பண நெருக்கடி, கொடுக்கல் வாங்கல்களில் குளறுபடி, நினைத்த பொருட்களை வாங்க முடியாமல் தட்டுப்பாடு, குடும்ப உறுப்பினர்கள் இடையே கடும் பேச்சுவார்த்தைகளால் சர்ச்சைகள் உண்டாகும். உத்தியோகம், விவசாயம், வர்த்தகம் போன்ற ஜீவன காரிய விஷயங்களிலும் இடர்பாடுகள், தொல்லைகள் தொடரும். காவல் துறை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.புதன் சாதகமற்ற நிலையில் உள்ளதால், நண்பர்கள், உறவினர்கள், மாமன், மைத்துனர்கள் போன்ற வழிகளில் செலவுகளைச் சந்திக்கலாம். அவர்கள் கேட்ட உதவியைச் செய்யவும், அவர்களை உபசரிக்கவும் கணிசமான பணத்தை செலவிடலாம். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வருவது தாமதமாகலாம். ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால், பிள்ளைகள் வழியிலோ அல்லது மற்ற வகையிலோ கணிசமான தொகை செலவாகலாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்களால் சந்தோஷம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் கவனம் அவசியம்.

கன்னி [22-08-10 முதல் 28-08-10 வரை]

கன்னி ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் மற்றவர்களை நம்பி ஒப்படைத்த சில வேலைகள் முடிவடையாமல் அவற்றை நீங்களே செய்ய நேரிடலாம். ஜம்பமாகப் பேசி சில விஷயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் செல்லலாம். 24, 25, 26ம் தேதிகளில் பணவரவுகளுக்கு வாய்ப்பு உண்டு. சிலர் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். மனதில் இனம்புரியாத சந்தோஷம், மகிழ்ச்சி குடிகொள்ளும். கவலைகள் விலகி மனதில் நிம்மதி குடிகொள்ளும்.ஜென்ம ராசியில் செவ்வாய், சனி சேர்ந்திருப்பதால் உடல் நலம் சொல்லிக் கொள்ளும் வகையில் திருப்திகரமாக இருக்காது. சிலர் கடன் பிரச்னைகளால் கலக்கம் அடையலாம். உத்தியோகம், விவசாயம், வர்த்தகம் போன்ற ஜீவன காரிய விஷயங்களிலும் சிரமங்கள், வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் நினைத்த வேகத்திற்கு நடத்திக் கொள்ள முடியாமல் தவிக்கலாம். இருந்தாலும், சுக்கிரனும் ராசியிலேயே சஞ்சரிப்பதால், பகட்டான ஆடை, ஆபரணங்கள் வாங்குவதிலும், அணிவதிலும் நாட்டம் செல்லும். மற்றவர்கள் மத்தியில் பளிச்சென தோற்றம் அளிப்பீர்கள்.விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான வகையில் செலவு, அலைச்சல்கள் நேரும். தந்தையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், கல்வி முயற்சிகள், ஏஜன்சி தொழில் போன்றவற்றில் அனுகூலம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த சிலரை எதிர்பாராமல் சந்திக்கலாம்.

துலாம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

துலாம் ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்களுக்கு ஆட்படலாம். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். சில காரியங்களுக்கு ஒன்றுக்கு இரு மடங்காக செலவாகும். 24, 25, 26ம் தேதிகளில் சில விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாமல் மனம் அலைபாயும். சபலங்களால், பேராசைகளால் இழப்புகள், சங்கடங்களுக்கு ஆட்படலாம். சிறிய பிரச்னை ஒன்றை நினைத்து பெரிய அளவில் கவலைப்படுவீர்கள்.விரய ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால், தொழில், உத்தியோகம், விவசாயம் போன்ற ஜீவன காரிய விஷயங்களில் சிரமங்கள், தொல்லைகளைச் சந்திக்கலாம். எந்த காரியமும் நினைத்த வேகத்திற்கு முடியாமல், மெதுவாக நடக்கலாம். தொழில் செய்வோர் வேலையாட்கள் இல்லாமல் அவதிப்படலாம். சட்டம், நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களாலும் மன அமைதி பாதிக்கப்படலாம். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். சிலர் வீடு கட்டுவதற்காக கணிசமான பணத்தை செலவிடலாம் அல்லது அதற்காக கடன் வாங்கலாம்.சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால், பெண்கள், பயணங்கள், வாகன பராமரிப்பு, உறவினர்களை உபசரித்தல், சகோதரிகள் உடல் நலத்தை கவனித்தல் போன்ற வழிகளில் செலவுகள் ஏற்படலாம். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள், மாமன், மைத்துனர்கள் போன்ற வழிகளில் ஆதாயம், அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.வரும் 27, 28ம் தேதிகளில் பணவரவுகளைப் பெறலாம். உற்சாகம் கூடும்.

விருச்சிகம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

விருச்சிக ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் பணவரவுக்கும், முக்கியமான காரியங்களை முடித்துக் கொள்ளவும், பெரிய மனிதர்களின் உதவிகளைப் பெறவும் வாய்ப்பு உண்டு. சில பொருட்களை சகாய விலையில் வாங்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்தமான சில பொருட்களை மற்றவர்கள் கொடுக்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் வேலை நெருக்கடிகளைச் சந்திக்கலாம். நீண்ட தூர பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். முக்கியமான வேலை ஒன்றை மற்றவர்களின் தலையீட்டால் முடிக்க முடியாமல் போகலாம்.சூரியன் சாதகமான நிலையில் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறலாம். பணிபுரிவோர் நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கலாம். லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்கிரன் இருப்பது அனுகூலமே. எதிர்ப்புகள், போட்டிகள் முடங்கி நினைத்ததைச் சாதிப்பீர்கள். கடந்த காலத்தில் காலை வாரி விட்டவர்களே, உங்களுக்கு கை கொடுத்து உதவ முன்வருவர். காவல்துறையில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு சாதகமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டு.குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால், கொடுக்கல் வாங்கல்களில் சற்று எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கடும் பேச்சுவார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.வரும் 27, 28ம் தேதிகளில் குழப்பங்கள், தடுமாற்றங்களுக்கு ஆட்படலாம். தண்டச் செலவுகள் நேரும்.

தனுசு [22-08-10 முதல் 28-08-10 வரை]

தனுசு ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு மனஸ்தாபம் ஏற்படலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள். எதிர்பார்த்தபடி சில விஷயங்கள் நடக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் நல்ல சில காரியங்கள் நடக்கலாம். கணிசமான பணவரவுகளைப் பெறலாம். உங்களின் செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயம் பெறலாம்.காரிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் வேலைப்பளுவுக்கு குறைவிருக்காது. தொழில், உத்தியோகம், விவசாயம் போன்ற ஜீவன காரிய விஷயங்களில் ஏற்படும் நெருக்கடியால் மன அமைதி பாதிக்கப்படலாம். அடிக்கடி வெறுப்பு, விரக்தி, சலிப்பு ஆட்கொள்ளும். வாகனங்கள் வழியிலோ, உறவுப் பெண்கள் வழியிலோ அல்லது சகோதரிகள் வழியிலோ கணிசமான தொகையை செலவு செய்யலாம். நீதிமன்றம், காவல்துறை தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்தது போல அமைவது கடினமே. சில விஷயங்களில் ஏடாகூடமாக செயல்பட்டு அவதிகளுக்கு ஆளாகலாம்.புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் பெறலாம். கல்வி முயற்சிகள் சாதகமாக அமையும். ஏஜன்சி, கமிஷன் தொழில் புரிவோருக்கு வருவாய் அதிகரிக்கும். ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவில் நெருடல்கள் வராமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். சூரியன் ஆட்சி பலத்துடன் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பான விஷயங்களில் சிரமங்கள் இருந்தாலும், அதை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.வரும் 27,28ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கடன் வசூலாகும்.

மகரம்[22-08-10 முதல் 28-08-10 வரை]

மகர ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்தோஷமான அனுபவங்களை எதிர்கொள்ளலாம். அதேநேரத்தில், சிலரின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகளால் எரிச்சல் அடையும் சூழ்நிலை உருவாகும். பணவரவுகளைப் பெறலாம். 24, 25, 26ம் தேதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செலவுகளை சந்திக்கலாம். திட்டமிட்ட வேலைகளில் திடீரென மாற்றம் செய்யலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். பெருமைக்காக சில காரியங்களைச் செய்வீர்கள்.மூன்றாம் இடத்தில் வக்கிர கதியில் இருக்கும் குரு பகவான், சாதகமான பலன்களை வழங்குவார். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள், நல்லவர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி முயற்சிகளில் நினைத்தது நடக்கும். கடனுதவி, நிதியுதவி பெற மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. ஆறாம் இடத்தில் கேது இருப்பதால், மாற்று மதத்தினர், மாற்று மொழி பேசும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் ஆதாயம் பெறலாம்.சூரியன், புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான விஷயங்களில் எல்லாம் சிரமங்கள் உண்டாகும். தகப்பனாருடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெண்களுக்கு, பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். காரிய வெற்றி, பணவரவு உண்டு.

கும்பம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

கும்ப ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்திரன் விரய ராசியில் சஞ்சரிப்பதால் செலவுகளில் சிக்கனம் காட்ட வேண்டும். சிறிய வேலைகளுக்கு கூட பல முறை அலைய நேரிடலாம். தேவையில்லாத பொருட்களை வாங்கி பணத்தை கரைக்கலாம். திடீர் வெளியூர் பயணங்கள் செல்லலாம். 24, 25, 26ம் தேதிகளில் மனதில் இனம்புரியாத சந்தோஷம், உற்சாகம் குடிகொள்ளும். பெண்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் மட்டுமின்றி, எதிர்பாராத பணவரவுகளையும் பெறலாம்.சூரியன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், கணவன் மனைவி உறவில் சச்சரவுகள் உருவாகலாம் என்பதால், பொறுமை அவசியம். திடீரென கோபம் கொண்டு, மற்றவர்களிடம் எரிந்து விழுவது அதிகரிக்கும் என்பதால், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தொடர்பான விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும். அரசு தொடர்பான காரியங்கள் எளிதில் முடியாமல் இழுத்தடிக்கலாம்.புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், உறவுப் பெண்கள், சகோதரிகள், இதர பெண்கள் வகையில் அனுகூலம், ஆதாயம் பெறலாம். அவர்கள் வழியில் உதவிகள் கிடைத்து பெருமை அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.அஷ்டமத்தில் சஞ்சரித்து ஏற்கனவே பல கஷ்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும் சனியுடன், தற்போது செவ்வாயும் சேர்ந்திருப்பதால், தொழில் விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். சகோதரர்கள், பங்காளிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். அவர்கள் வழியில் விரயமும் நேரலாம். சொத்து விவகாரங்களிலும் கவனம் அவசியம்.வரும் 27, 28ம் தேதிகளில் செலவு கூடும். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.

மீனம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மீன ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஆதாயகரமான பணவரவுகளை, பொருள் வரவுகளைப் பெறலாம். உறவினர்கள், நண்பர்கள் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். 24, 25, 26ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்களுக்கு ஆட்படலாம். நீண்ட நாட்களாக தள்ளி வைத்த வேலை ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தர்ம, புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள்.ஏழாம் இடத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. கூட்டுத் தொழில் விவகாரங்களோ அல்லது கூட்டாக மேற்கொண்ட முயற்சிகளிலோ பலன் கிடைப்பது கடினம். பெண்கள் வகையில் எதிர்பாராத தண்டச் செலவுகளைச் சந்திக்கலாம். உடல் ரீதியான உபாதைகளாலும், வாழ்க்கைத் துணைவரால் ஏற்படும் பிரச்னைகளாலும் பலருக்கு மன அமைதி பாதிக்கப்படலாம். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்தது போல நடக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். தொழில் செய்வோர் சரியான வேலையாட்கள் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், அவர்கள் சரியாக செயல்படாததாலும் எரிச்சல் அடையலாம். அதேநேரத்தில், சூரியன் சாதகமாக இருப்பதால், தந்தை வழியில் அனுகூலமான உதவிகள் கிடைக்கலாம். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால், அலைச்சல்களுக்கு குறைவிருக்காது.வரும் 27, 28ம் தேதிகளில் உறவினர்கள் சிலரின் சந்திப்பு நிகழும். ஓய்வாக இருக்காமல் பரபரப்பாக ஏதாவது வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு உண்டு.