Thursday, August 26, 2010

இந்த வாரம் உங்களுக்கு எப்படி????



மேஷம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மேஷ ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் தொழில் ரீதியான பணவரவுகளைப் பெறலாம். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். கடன் பாக்கிகள், கட்டண பாக்கிகளை செலுத்துவீர்கள். நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். 24, 25, 26ம் தேதிகளில் மனைவி, குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள். உறவினர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம்.செவ்வாய், சனி சாதகமாக இயங்குவதால், உத்தியோகம், விவசாயப் பணிகள், வர்த்தகம், வீடு, மனை தொடர்பான விஷயங்கள், சட்டம், காவல்துறை தொடர்பான வகையில் நன்மைகள் கைகூடும். போட்டி, எதிர்ப்புகளை முறியடித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்காக சில நல்ல காரியங்களைச் செய்யலாம். கடன் பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பு உருவாகும்.புதன் சாதகமாக இருப்பதால், கல்வி முயற்சிகள், ஏஜன்சி, கமிஷன் தொழில், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. இருந்தாலும், தேக ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். கேது சாதகமான நிலையில் உள்ளதால் மாற்று மதத்தினர் உதவிகரமாக இருப்பர். இளைய உடன் பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமற்ற நிலையில் உள்ளதால் பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் செலவுகள் கூடும்.வரும் 27, 28ம் தேதிகளில் செலவு, அலைச்சல் உண்டு.

ரிஷபம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

ரிஷப ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் உடல் நலக் குறைவுகளால் அவதிப்படலாம். முக்கியமான கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் சிலரை எதிர்பாராமல் சந்திக்கலாம். விருப்பம் இல்லாமல் சில செலவுகளைச் செய்யலாம். 24, 25, 26ம் தேதிகளில் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு வேலைகள் காரணமாகவோ பரபரப்பாக செயல்படலாம். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளுக்கு வாய்ப்பு உண்டு.புத்தி ஸ்தானத்தில் செவ்வாயும், சனியும் சஞ்சரித்து வருவதால், அவ்வப்போது மன அமைதியை, நிம்மதியை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கலாம். சொத்து விவகாரங்கள், சகோதரர்கள், போலீஸ் தொடர்பான விஷயங்கள், உத்தியோக ரீதியான காரியங்கள், கட்டட பணிகள், கடன் விவகாரங்கள் போன்றவற்றில் சிரமங்கள், மன உளைச்சல்களுக்கு ஆட்படலாம். இருந்தாலும், சுக்கிரனும் அங்கிருப்பதால், சற்று ஆறுதலான அனுபவங்களையும் அவ்வப்போது எதிர்கொள்ளலாம். பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள், கேளிக்கை கொண்டாட்டங்கள், விருந்து, உபசரிப்புகள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள்.நான்காம் இடத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கும் சூரியன், பத்தாம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக பரபரப்பாக செயல்பட நேரிடலாம். அடுக்கடுக்காக பல வேலைகள் குவியலாம். தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான வகையில் அலைச்சல், திரிச்சல் உண்டு. குரு வக்கிர கதியில் இருப்பதால், பெரிய மனிதர்கள், நல்லவர்களின் ஆலோசனை, உதவி கிடைப்பது கடினம்.வரும் 27, 28ம் தேதிகளில் ஆதாயகரமான பணவரவுகளைப் பெறலாம். சில வேலைகள் சுலபமாக முடியும்.

மிதுனம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மிதுன ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், மந்தம், மறதி, கவனக்குறைவு போன்றவற்றால் அவதிப்படலாம். சிலரிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனஅமைதி பாதிக்கப்படலாம். முக்கிய வேலைகளில் முடக்கம் ஏற்படலாம். தண்டச் செலவு நேரும். 24, 25, 26ம் தேதிகளில் கலகலப்பான அனுபவங்களைச் சந்திக்கலாம். எதிர்பாராத பணவரவு ஒன்று வந்தாலும், அதை மற்றொரு வகையில் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்லலாம்.சூரியன் மூன்றாம் இடத்தில் சாதகமாக இருப்பதால், தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக முடியும். அரசு கான்ட்ராக்ட் எடுக்க மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் அகன்று பாசம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளை நம்பி இறங்கிய காரியங்களில் முன்னேற்றம் உண்டு. மருத்துவ சிகிச்சை பெற மேற்கொண்ட முயற்சிகளிலும் முன்னேற்றம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்கள் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். ஏஜன்சி தொழில் புரிவோர் கணிசமான வருவாய் பெறலாம். நான்காம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால், உடல் ரீதியாக சிறு, சிறு உபாதைகள் அவ்வப்போது உங்களை ஆட்கொண்டு உற்சாகத்தை குறைக்கலாம். வேலைப்பளுவும் அதிகரிக்கும். எந்த வேலையும் சுலபமாக முடியாமல் கடுமையாக இழுத்தடிக்கலாம். வரும் 27, 28ம் தேதிகளில் காரிய வெற்றி உண்டு. பணம் வரும்.

கடகம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

கடக ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். பழகிய சிலர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ பணவரவுகளைப் பெறலாம். அண்டை, அயலார் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடுமையான வேலை நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் அசராமல் செய்து முடிப்பீர்கள். 24, 25, 26ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் பொறுமை, நிதானமாக செயல்பட வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்கள், வீண் அலைச்சல்களுக்கு ஆட்படலாம். எதிர்பார்த்த பணவரவுகள் வராமல் இழுத்தடிக்கலாம். பயணங்களில் தடை ஏற்படலாம்.மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருப்பதால், எந்த பிரச்னைகளையும் சமாளிக்கும் வல்லமை அதிகரிக்கும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லை விட்டுச் செல்வர். போலீஸ், நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தது போல சாதகமாக அமையலாம். வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். தடைபட்ட கட்டட பணிகளை முடுக்கி விடும் சூழ்நிலை உருவாகும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் அடைவீர்கள். சகோதரிகள் மீதான பாசம் அதிகரிக்கும். அவர்கள் கேட்டதை கொடுப்பீர்கள்.இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால், சூடான பேச்சு வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அரசியல், மருத்துவம், அரசாங்கம், அதிகாரிகள், தகப்பனார் தொடர்பான விஷயங்களில் தொல்லைகளே அன்றி, அனுகூலம் இல்லை.வரும் 27, 28ம் தேதிகளில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்கலாம். செலவு உண்டு.

சிம்மம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

சிம்ம ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம். பல மணி நேரமாகும் என, நினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். சந்தோஷம் தரும் செய்திகளைக் கேட்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் சந்தோஷமான அனுபவங்களை எதிர்கொள்ளலாம். அடுத்த சில நாட்களுக்குப் பின் நடைபெற உள்ள காரியங்களுக்காக முன்னேற்பாடு செய்வீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாயும், சனியும் சஞ்சரிப்பதால் பண நெருக்கடி, கொடுக்கல் வாங்கல்களில் குளறுபடி, நினைத்த பொருட்களை வாங்க முடியாமல் தட்டுப்பாடு, குடும்ப உறுப்பினர்கள் இடையே கடும் பேச்சுவார்த்தைகளால் சர்ச்சைகள் உண்டாகும். உத்தியோகம், விவசாயம், வர்த்தகம் போன்ற ஜீவன காரிய விஷயங்களிலும் இடர்பாடுகள், தொல்லைகள் தொடரும். காவல் துறை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.புதன் சாதகமற்ற நிலையில் உள்ளதால், நண்பர்கள், உறவினர்கள், மாமன், மைத்துனர்கள் போன்ற வழிகளில் செலவுகளைச் சந்திக்கலாம். அவர்கள் கேட்ட உதவியைச் செய்யவும், அவர்களை உபசரிக்கவும் கணிசமான பணத்தை செலவிடலாம். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வருவது தாமதமாகலாம். ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால், பிள்ளைகள் வழியிலோ அல்லது மற்ற வகையிலோ கணிசமான தொகை செலவாகலாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்களால் சந்தோஷம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால், எதிலும் கவனம் அவசியம்.

கன்னி [22-08-10 முதல் 28-08-10 வரை]

கன்னி ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் மற்றவர்களை நம்பி ஒப்படைத்த சில வேலைகள் முடிவடையாமல் அவற்றை நீங்களே செய்ய நேரிடலாம். ஜம்பமாகப் பேசி சில விஷயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் செல்லலாம். 24, 25, 26ம் தேதிகளில் பணவரவுகளுக்கு வாய்ப்பு உண்டு. சிலர் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். மனதில் இனம்புரியாத சந்தோஷம், மகிழ்ச்சி குடிகொள்ளும். கவலைகள் விலகி மனதில் நிம்மதி குடிகொள்ளும்.ஜென்ம ராசியில் செவ்வாய், சனி சேர்ந்திருப்பதால் உடல் நலம் சொல்லிக் கொள்ளும் வகையில் திருப்திகரமாக இருக்காது. சிலர் கடன் பிரச்னைகளால் கலக்கம் அடையலாம். உத்தியோகம், விவசாயம், வர்த்தகம் போன்ற ஜீவன காரிய விஷயங்களிலும் சிரமங்கள், வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் நினைத்த வேகத்திற்கு நடத்திக் கொள்ள முடியாமல் தவிக்கலாம். இருந்தாலும், சுக்கிரனும் ராசியிலேயே சஞ்சரிப்பதால், பகட்டான ஆடை, ஆபரணங்கள் வாங்குவதிலும், அணிவதிலும் நாட்டம் செல்லும். மற்றவர்கள் மத்தியில் பளிச்சென தோற்றம் அளிப்பீர்கள்.விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான வகையில் செலவு, அலைச்சல்கள் நேரும். தந்தையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், கல்வி முயற்சிகள், ஏஜன்சி தொழில் போன்றவற்றில் அனுகூலம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த சிலரை எதிர்பாராமல் சந்திக்கலாம்.

துலாம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

துலாம் ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்களுக்கு ஆட்படலாம். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். சில காரியங்களுக்கு ஒன்றுக்கு இரு மடங்காக செலவாகும். 24, 25, 26ம் தேதிகளில் சில விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாமல் மனம் அலைபாயும். சபலங்களால், பேராசைகளால் இழப்புகள், சங்கடங்களுக்கு ஆட்படலாம். சிறிய பிரச்னை ஒன்றை நினைத்து பெரிய அளவில் கவலைப்படுவீர்கள்.விரய ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால், தொழில், உத்தியோகம், விவசாயம் போன்ற ஜீவன காரிய விஷயங்களில் சிரமங்கள், தொல்லைகளைச் சந்திக்கலாம். எந்த காரியமும் நினைத்த வேகத்திற்கு முடியாமல், மெதுவாக நடக்கலாம். தொழில் செய்வோர் வேலையாட்கள் இல்லாமல் அவதிப்படலாம். சட்டம், நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களாலும் மன அமைதி பாதிக்கப்படலாம். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். சிலர் வீடு கட்டுவதற்காக கணிசமான பணத்தை செலவிடலாம் அல்லது அதற்காக கடன் வாங்கலாம்.சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால், பெண்கள், பயணங்கள், வாகன பராமரிப்பு, உறவினர்களை உபசரித்தல், சகோதரிகள் உடல் நலத்தை கவனித்தல் போன்ற வழிகளில் செலவுகள் ஏற்படலாம். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள், மாமன், மைத்துனர்கள் போன்ற வழிகளில் ஆதாயம், அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.வரும் 27, 28ம் தேதிகளில் பணவரவுகளைப் பெறலாம். உற்சாகம் கூடும்.

விருச்சிகம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

விருச்சிக ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் பணவரவுக்கும், முக்கியமான காரியங்களை முடித்துக் கொள்ளவும், பெரிய மனிதர்களின் உதவிகளைப் பெறவும் வாய்ப்பு உண்டு. சில பொருட்களை சகாய விலையில் வாங்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்தமான சில பொருட்களை மற்றவர்கள் கொடுக்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் வேலை நெருக்கடிகளைச் சந்திக்கலாம். நீண்ட தூர பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். முக்கியமான வேலை ஒன்றை மற்றவர்களின் தலையீட்டால் முடிக்க முடியாமல் போகலாம்.சூரியன் சாதகமான நிலையில் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறலாம். பணிபுரிவோர் நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கலாம். லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்கிரன் இருப்பது அனுகூலமே. எதிர்ப்புகள், போட்டிகள் முடங்கி நினைத்ததைச் சாதிப்பீர்கள். கடந்த காலத்தில் காலை வாரி விட்டவர்களே, உங்களுக்கு கை கொடுத்து உதவ முன்வருவர். காவல்துறையில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு சாதகமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். பெண்கள், பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டு.குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால், கொடுக்கல் வாங்கல்களில் சற்று எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கடும் பேச்சுவார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.வரும் 27, 28ம் தேதிகளில் குழப்பங்கள், தடுமாற்றங்களுக்கு ஆட்படலாம். தண்டச் செலவுகள் நேரும்.

தனுசு [22-08-10 முதல் 28-08-10 வரை]

தனுசு ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு மனஸ்தாபம் ஏற்படலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள். எதிர்பார்த்தபடி சில விஷயங்கள் நடக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். 24, 25, 26ம் தேதிகளில் நல்ல சில காரியங்கள் நடக்கலாம். கணிசமான பணவரவுகளைப் பெறலாம். உங்களின் செல்வாக்கை பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயம் பெறலாம்.காரிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் வேலைப்பளுவுக்கு குறைவிருக்காது. தொழில், உத்தியோகம், விவசாயம் போன்ற ஜீவன காரிய விஷயங்களில் ஏற்படும் நெருக்கடியால் மன அமைதி பாதிக்கப்படலாம். அடிக்கடி வெறுப்பு, விரக்தி, சலிப்பு ஆட்கொள்ளும். வாகனங்கள் வழியிலோ, உறவுப் பெண்கள் வழியிலோ அல்லது சகோதரிகள் வழியிலோ கணிசமான தொகையை செலவு செய்யலாம். நீதிமன்றம், காவல்துறை தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்தது போல அமைவது கடினமே. சில விஷயங்களில் ஏடாகூடமாக செயல்பட்டு அவதிகளுக்கு ஆளாகலாம்.புதன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் பெறலாம். கல்வி முயற்சிகள் சாதகமாக அமையும். ஏஜன்சி, கமிஷன் தொழில் புரிவோருக்கு வருவாய் அதிகரிக்கும். ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவில் நெருடல்கள் வராமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். சூரியன் ஆட்சி பலத்துடன் இருப்பதால், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பான விஷயங்களில் சிரமங்கள் இருந்தாலும், அதை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.வரும் 27,28ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கடன் வசூலாகும்.

மகரம்[22-08-10 முதல் 28-08-10 வரை]

மகர ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்தோஷமான அனுபவங்களை எதிர்கொள்ளலாம். அதேநேரத்தில், சிலரின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகளால் எரிச்சல் அடையும் சூழ்நிலை உருவாகும். பணவரவுகளைப் பெறலாம். 24, 25, 26ம் தேதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செலவுகளை சந்திக்கலாம். திட்டமிட்ட வேலைகளில் திடீரென மாற்றம் செய்யலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். பெருமைக்காக சில காரியங்களைச் செய்வீர்கள்.மூன்றாம் இடத்தில் வக்கிர கதியில் இருக்கும் குரு பகவான், சாதகமான பலன்களை வழங்குவார். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள், நல்லவர்களின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி முயற்சிகளில் நினைத்தது நடக்கும். கடனுதவி, நிதியுதவி பெற மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. ஆறாம் இடத்தில் கேது இருப்பதால், மாற்று மதத்தினர், மாற்று மொழி பேசும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் ஆதாயம் பெறலாம்.சூரியன், புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், தகப்பனார், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மருத்துவம் தொடர்பான விஷயங்களில் எல்லாம் சிரமங்கள் உண்டாகும். தகப்பனாருடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெண்களுக்கு, பயணங்கள், பொழுது போக்கு விஷயங்கள் போன்றவற்றால் சந்தோஷம் உண்டு.வரும் 27, 28ம் தேதிகளில் ஊக்கம், உற்சாகமாக செயல்படுவீர்கள். காரிய வெற்றி, பணவரவு உண்டு.

கும்பம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

கும்ப ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் சந்திரன் விரய ராசியில் சஞ்சரிப்பதால் செலவுகளில் சிக்கனம் காட்ட வேண்டும். சிறிய வேலைகளுக்கு கூட பல முறை அலைய நேரிடலாம். தேவையில்லாத பொருட்களை வாங்கி பணத்தை கரைக்கலாம். திடீர் வெளியூர் பயணங்கள் செல்லலாம். 24, 25, 26ம் தேதிகளில் மனதில் இனம்புரியாத சந்தோஷம், உற்சாகம் குடிகொள்ளும். பெண்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் மட்டுமின்றி, எதிர்பாராத பணவரவுகளையும் பெறலாம்.சூரியன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், கணவன் மனைவி உறவில் சச்சரவுகள் உருவாகலாம் என்பதால், பொறுமை அவசியம். திடீரென கோபம் கொண்டு, மற்றவர்களிடம் எரிந்து விழுவது அதிகரிக்கும் என்பதால், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தொடர்பான விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும். அரசு தொடர்பான காரியங்கள் எளிதில் முடியாமல் இழுத்தடிக்கலாம்.புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மாமன், மைத்துனர்கள், நண்பர்கள், உறவினர்கள், உறவுப் பெண்கள், சகோதரிகள், இதர பெண்கள் வகையில் அனுகூலம், ஆதாயம் பெறலாம். அவர்கள் வழியில் உதவிகள் கிடைத்து பெருமை அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.அஷ்டமத்தில் சஞ்சரித்து ஏற்கனவே பல கஷ்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும் சனியுடன், தற்போது செவ்வாயும் சேர்ந்திருப்பதால், தொழில் விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். சகோதரர்கள், பங்காளிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். அவர்கள் வழியில் விரயமும் நேரலாம். சொத்து விவகாரங்களிலும் கவனம் அவசியம்.வரும் 27, 28ம் தேதிகளில் செலவு கூடும். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும்.

மீனம் [22-08-10 முதல் 28-08-10 வரை]

மீன ராசி அன்பர்களே,

இந்த வாரம் 22, 23ம் தேதிகளில் ஆதாயகரமான பணவரவுகளை, பொருள் வரவுகளைப் பெறலாம். உறவினர்கள், நண்பர்கள் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். 24, 25, 26ம் தேதிகளில் ஆதாயமில்லாத அலைச்சல்களுக்கு ஆட்படலாம். நீண்ட நாட்களாக தள்ளி வைத்த வேலை ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தர்ம, புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள்.ஏழாம் இடத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. கூட்டுத் தொழில் விவகாரங்களோ அல்லது கூட்டாக மேற்கொண்ட முயற்சிகளிலோ பலன் கிடைப்பது கடினம். பெண்கள் வகையில் எதிர்பாராத தண்டச் செலவுகளைச் சந்திக்கலாம். உடல் ரீதியான உபாதைகளாலும், வாழ்க்கைத் துணைவரால் ஏற்படும் பிரச்னைகளாலும் பலருக்கு மன அமைதி பாதிக்கப்படலாம். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்தது போல நடக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். தொழில் செய்வோர் சரியான வேலையாட்கள் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், அவர்கள் சரியாக செயல்படாததாலும் எரிச்சல் அடையலாம். அதேநேரத்தில், சூரியன் சாதகமாக இருப்பதால், தந்தை வழியில் அனுகூலமான உதவிகள் கிடைக்கலாம். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால், அலைச்சல்களுக்கு குறைவிருக்காது.வரும் 27, 28ம் தேதிகளில் உறவினர்கள் சிலரின் சந்திப்பு நிகழும். ஓய்வாக இருக்காமல் பரபரப்பாக ஏதாவது வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு உண்டு.

No comments: